தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Devarakonda Puri Jagannadh Shoot Starts

வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளிவரவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் ஒரு படத்தில் இணைகிறார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

Vijay Devarakonda Puri Jagannadh Shoot Starts

இந்த படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது.இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அனன்யா பாண்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.