கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன்.  முன்னணி தமிழ் எழுத்தாளரான பூமணி அவர்களின் வெட்கை நாவலை தழுவி உருவாக்கப்பட்ட அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மலையாள நடிகையான மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க கென் கருணாஸ், அம்மு அபிராமி, டீ ஜே உள்ளிட்டோர் உடன் இணைந்து நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. முன்னணி தெலுங்கு நடிகரான வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் ரீமேக் நாரப்பா என பெயரிடப்பட்டது. தமிழில் நடிகை மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை பிரியாமணி நடிதுதுள்ளார். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் அடல்லா இயக்கியிருக்கும் நாரப்பா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக OTT-யில் வெளியாகும் நாரப்பா திரைப்படம், வருகிற ஜூலை 20-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இந்நிலையில் தற்போது நாரப்பா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.