தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர் இயக்கி வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

Venkat Prabhu Shares Brothers Day Tiktok Video

இன்று சர்வதேச சகோதரர் தினம் என்பதால், சகோதரர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தர்மத்தின் தலைவன் பட காட்சியில் ரஜினியை அடிக்கப்போகும் பிரபு, தனது அண்ணன் ரஜினி சாயலில் இருப்பதைக் கண்டு பிரமித்து நிற்பார்.

Venkat Prabhu Shares Brothers Day Tiktok Video

அதே போல் இந்த வீடியோவில் வெங்கட் பிரபுவை அடிக்கப்போகும் பிரேம்ஜி அதிர்ச்சியுடன் நிற்கிறார். என்னவென்று பார்த்தால் வெங்கட் பிரபுவின் கையில் ஜாக் டேனியல்ஸ் மதுபானம் உள்ளது. அவரிடமிருந்து பிரேம்ஜி அதை எடுத்துச் செல்கிறார். இந்த வீடியோ பழைய வீடியோ என்பதையும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாதிரி அண்ணன் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.