XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

Vedhika Dancing For Master Movie Kutty Story Song

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Vedhika Dancing For Master Movie Kutty Story Song

இந்நிலையில் நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திலிருந்து முதலில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் மிகவும் வைரலானது. தளபதி விஜய்யின் குரலில் உருவான இந்த பாடல், பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வேதிகாவின் இந்த அசத்தல் நடனம் இணையத்தை கவர்ந்து வருகிறது.