சிம்பு பட போஸ்டரை வெளியிட்ட வெங்கட்பிரபு !
By Sakthi Priyan | Galatta | December 23, 2019 10:08 AM IST

எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு விமானியாக நடித்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. சமீபத்தில் சபரி மலையில் இருந்து திரும்பினார் சிம்பு.
யு.ஆர்.ஜமீல் இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்த படத்தின் எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகா இணைந்து காட்சியளிக்கும் ரொமான்டிக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.