பொதுவாக இயக்குனர்களின் பெயர் பலகை வரும்போது தான் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் படம் முடிந்தவுடனும் ப்ளூப்பர் காட்சிகளால் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது STR வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

venkatprabhu

இந்நிலையில்  இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விருப்பமானவைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், தற்போதைய விருப்பமான பாடல் அந்த கண்ண பார்த்தாக்க என்றும் எப்பொழுதும் விருப்பமான பாடலாக மைக்கேல் ஜாக்சனின் மேன் இன் த மிரர் பாடல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

VenkatPrabhu

அனிருத் இசையில் உருவாகிய இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். மேலும் தனக்கு பிடித்த நிறம் - கருப்பு, விருப்பமான நடிகர் - ராபின் வில்லியம்ஸ், விருப்பமான ட்ரிங்க் - அக்ரஹாரத்து ஃபில்டர் காபி பகல் பொழுதிலும், மாலையில் hibiki  என்றும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் சூர்யா, இயக்குனர் கவுதம் மேனன், இயக்குனர் மோகன் ராஜா ஆகியோரை நாமினேட் செய்துள்ளார்.