வெயிட்டாக வந்திறங்கிய வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடல் !
By Aravind Selvam | Galatta | August 02, 2021 23:00 PM IST
தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.
கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இந்த வருட இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது இந்த படத்தின் நாங்க வேற மாதிரி என்ற ஓப்பனிங் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.விக்னேஷ் ஷிவன் இந்த பாடலை எழுதியுள்ளார்.செம மாஸான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Yashika Aannand's first heartfelt statement after the death of her close friend!
03/08/2021 10:32 AM
Watch the intriguing trailer of Money Heist: Season 5 here - Professor is back!
02/08/2021 07:35 PM