தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் மக்கள்பணி ஆற்றி பல பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

ஹீரோவாக பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தயாரிப்பாளராகவும் , தரமான படைப்புக்களை தொடர்ந்து தயாரித்தும் , விநியோகம் செய்தும் வருகிறார்.இவர் கிருத்திகாவை கடந்த 2002-ஆம் ஆண்டு காதலித்து கரம்பிடித்தார்.பிரபல பத்திரிக்கையில் பணியாற்றி வந்த கிருத்திகா உதயநிதி அடுத்ததாக சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் இயக்குனாராக அறிமுகமானார்.

வணக்கம் சென்னை,காளி போன்ற வெற்றி படங்களை இயக்கியதை அடுத்து வளர்ந்து வரும் OTT யுகத்தில் அடுத்ததாக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்துகொண்டு , பலருக்கும் Couple Goals செட் செய்து வருகின்றனர்.பல வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து ஒரு பிரத்யேக பேட்டியை கலாட்டாவிற்காக கொடுத்துள்ளனர்.தங்கள் சினிமா வாழ்க்கை,காதல் கதை,சினிமா மற்றும் வாழ்க்கையை பேலன்ஸ் செய்வது என பல ஸ்வாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.பல ஜாலியான மற்றும் கேண்டிட் நிகழ்வுகள் நிறைந்த இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்