விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளரும் தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்து தொடர்பாக தமிழக போலீசார் யாஷிகா மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக நள்ளிரவில் நண்பர்களோடு நடிகை யாஷிகா ஆனந்த் மாமல்லபுரத்தின் ஈசிஆர் சாலையில் அதிவேகமாக காரில் பயணம் செய்துள்ளார். மல்லபுரம் அருகே உள்ள  சூளேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நடிகை யாஷிகா ஆனந்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி பின்னர் நிலைதடுமாறிய கார் சாலையின் அருகில் இருந்த குழியில் கவிழ்ந்து விழுந்து, விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பவானியின் வயது 28. மாமல்லபுரம் போலீஸார் உடனடியாக பவானியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காரை அதிவேகமாக ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இவர்கள் மீது தமிழக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். காரை அதிவேகமாக ஓட்டியது, விபத்துக்குள்ளாகியது மற்றும் பவானியின் உயிரிழப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.