தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாலசந்தர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. இந்நிறுவனம், 1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியது. படத் தயாரிப்பு மட்டுமல்லாது டிவி சீரியல்களையும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் யுகத்திலும் முதல் அடி எடுத்து வைத்தது கவிதாலயா நிறுவனம்தான். ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு தயாரித்தது.

தற்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றையும் அமேசான் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளது. டைம் என்ன பாஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டருடன் நேற்று வெளியிட்டது அமேசான் நிறுவனம். பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன், மமதி சாரி உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். 

டைம் ட்ராவல் செய்யும் ரூம்மேட்ஸிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு ஐடி ஊழியரின் கதை தான் இந்த டைம் என்ன பாஸ் வெப் சீரிஸின் கதைக்கரு. தற்போது இந்த வெப்சீரிஸின் ட்ரைலர் வெளியானது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் இந்த வெப்சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. சுப்பு இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸில் சுப்பு மற்றும் கீர்த்தி திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். Madley Blues இசை குழு இசையமைத்தது. 

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இதுதான் முதல் வெப்சீரிஸ் என்பது கூடுதல் தகவல். கடைசியாக மாஃபியா திரைப்படத்தில் நடித்தவர், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் கருணாகரன் கைவசம் ட்ரிப், மாநாடு, அயலான் போன்ற படங்கள் உள்ளது. 

சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. பரத் நடிப்பில் நடுவன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்து வருகிறார் பரத். சல்மான் கான், மேகா ஆகாஷ் இந்த படத்தில் உள்ளனர். 

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இதுதான் முதல் வெப்சீரிஸ் என்பது கூடுதல் தகவல். கடைசியாக மாஃபியா திரைப்படத்தில் நடித்தவர், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் கருணாகரன் கைவசம் ட்ரிப், மாநாடு, அயலான் போன்ற படங்கள் உள்ளது.