விளம்பர படங்களில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் திரு.லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளார்.

தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக 2500 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் முழுவீச்சில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐதராபாத், மும்பை மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் தி லெஜண்ட் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கும் தி லெஜண்ட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Happy to share the moments from @_TheLegendMovie
Press Meet happened at Dubai

Entire Overseas Theatrical Release by @APIfilms

Worldwide Release on July 28th!#TheLegend #DrSTheLegend #TheLegendSaravanan pic.twitter.com/7ZPW5uJYkN

— Galatta Media (@galattadotcom) July 25, 2022