தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

தி லெஜண்ட் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா ஹீரோயினாக நடிக்கிறார் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,பிரபு,யோகி பாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீளம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.நேற்று வெளியான அதிரடி டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.