தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திரையரங்குகளில் கொரோனாவிற்கு பிறகு வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன,தற்போது இந்த படத்தின் பாடல்கள் 1.3 பில்லியன் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டு அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் அதிகம் கேட்கப்பட்ட முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது.யூடியூப்பில் 2ஆவதாக அதிகம் கேட்கப்பட்ட ஆல்பம் ஆக இருக்கிறது மாஸ்டர்.