தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தளபதி விஜய் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தளபதி விஜய்க்கு ஜோடியாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிரடியான அறிவிப்புகள் வெளியானது. முன்னதாக தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக நகைச்சுவை நடிகர் யோகிபாபு மற்றும் விடிவி கணேஷ், பிரபல மலையாள நடிகர்  ஷைன் டாம் சாக்கோ பிரபல பாலிவுட் நடிகர்களான லில்லிபுட் ஃபரூக் அன்கூர் அஜித் விக்கல் மற்றும் பிரபல மலையாள நடிகையான அபர்ணா தாஸ் உள்ளிட்டோர்  தளபதி விஜய்யுடன் இணைந்து பெஸ்ட் படத்தில் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.