வாத்தி கம்மிங் வீடியோ பாடல் செய்த கலக்கல் சாதனை !
By Aravind Selvam | Galatta | March 08, 2021 21:12 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.விஜயின் துள்ளலான நடனத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.இந்த பாடல் தற்போது வெளியாகி இதுவரை 80 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.