மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் ரியோ !
By Aravind Selvam | Galatta | March 08, 2021 20:09 PM IST

சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணாமாக தள்ளிப்போனது.சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அசத்தி வந்தார் ரியோ.இந்த படத்தின் சில வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வந்தன.தற்போது ரியோ தனது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.