சில நல்ல விஷயங்கள் லேட்டா தான் வரும் ! மாஸ்டர் பிரபலம் பதிவு
By Aravind Selvam | Galatta | April 09, 2020 20:48 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இன்று இந்த படம் வெளியாகியிருக்கும் என்று பல ரசிகர்களும் தங்கள் வருத்தங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.படக்குழுவினரும் இது குறித்து பதிவிட்டிருந்தனர்.இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன்தாஸ் இது குறித்து பதிவிட்டுள்ளார்.சில நல்ல விஷயங்கள் கொஞ்சம் தள்ளிப்போகும் இப்போது எல்லோரும் பத்திரமாக வீட்டில் இருக்கலாம் பின்னர் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இந்த படத்தை கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.