தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

மாநாடு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் மாநாடு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்திருக்கும் நடிகர் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் பத்து தல. நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க நடிகரும் பாடகருமான டீஜே  அருணாச்சலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 

சமீபத்தில் தொடங்கப்பட்ட பத்து தல படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் டீஜே  அருணாச்சலம் இதன் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் மாஸ்ஸான ஒரு காட்சிக்காக தயாராகி வருவதாகவும் தன்னை வாழ்த்தும்படியும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.