நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தெலுங்கில் நடிகர் நானி உடன் சீட்டிமார் & பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடித்த குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான தட் இஸ் மகாலட்சுமி மற்றும் ஹிந்தியில் பிளான் ஏ பிளான் பி & போல் சுடியான் ஆகிய திரைப்படங்கள் அடுத்ததடுத்து வெளிவர உள்ளன.  இந்நிலையில் தமன்னாவின் மேஸ்ட்ரோ படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகியிருக்கும் மேஸ்ட்ரோ திரைப்படத்தில் ஹிந்தியில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். மேலும் நடிகர் நிதின் & நபா நடேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர் மெர்லபக்கா காந்தி இயக்கியுள்ளார். 

ஸ்ரீசெத் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் நிக்கிதா ரெட்டி தயாரித்திருக்கும் மேஸ்ட்ரோ படத்திற்கு ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய மஹதி ஸவரா சாகர் இசையமைத்துள்ளார்.நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார்  தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் மேஸ்ட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. விறுவிறுப்பான அந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.