பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.34 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் மனஅழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

Sushant Singh Rajput 50 Amazing Dreams

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தொலைக்காட்சியில் நடித்து படிப்படியாக முன்னேறி ஹீரோவாக ஆனார் சுஷாந்த்.பிறகு இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார்.இவரது இழப்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sushant Singh Rajput 50 Amazing Dreams

சுஷாந்த் தன்னுடைய வாழ்க்கையில் செய்யவேண்டிய விஷயங்கள் என்று 50 விஷயங்களை பதிவிட்டிருந்தார்.தற்போது இவரது இவரது 50 ஆசைகள் அடங்கிய பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1.விமானத்தை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும்
2. இடது கையில் கிரிக்கெட் விளையாட வேண்டும்
3. ஒரு சாம்பியனுடன் டென்னில் விளையாட வேண்டும்
4. 1000 செடிகளை நட வேண்டும். 
5. டெல்லி பொறியியல் கல்லூரி ஹாஸ்டலில் மாலை நேரம் பொழுதை கழிக்க வேண்டும்
6. புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் 
7. 6 மாதத்தில் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும்
8. காட்டில் ஒரு வாரம் இருக்க வேண்டும்
9. இலவச கல்விக்காக வேலை செய்ய வேண்டும்
10. அன்டார்டிக்காவுக்கு செல்ல வேண்டும்
11. விவசாயம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்
12. குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
13. லம்போர்கினி கார் வாங்க வேண்டும்
14. சுவாமி விவேகானந்தர் குறித்த ஆவணப்படம் எடுக்க வேண்டும்
15. யூரோப்புக்கு ரயிலில் செல்ல வேண்டும்   
என்று தனது கனவுகளை பட்டியலிட்டுள்ளார் முழு பட்டியலை கீழே உள்ள லிங்கில் காணலாம்

தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகள் நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மீதி கனவுகளை நிறைவேற்றாமல் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.