சூடுபிடிக்கும் சூர்யா 40 ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
By Sakthi Priyan | Galatta | December 21, 2019 17:43 PM IST

தமிழ் திரைத்துறையில் சிறந்த இயக்குனரான வெற்றிமாறன் இறுதியாக தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கினார். பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. வெற்றிமாறனின் வெற்றி படைப்பில் ஒன்றாக அமைந்தது. வெற்றிமாறனுக்கு இது ஆறாவது படமாகும். இதுதவிர்த்து வடசென்னை இரண்டாம் பாகமும் உள்ளது.
தற்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யா வைத்து படம் இயக்கவுள்ளார். சூர்யா 40 என உருவாகவிருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காப்பான் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா கைவசம் சூரரைப் போற்று படம் உள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றியடைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.