தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.

தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம்  ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்து வந்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 49dZFkcrKdk7XegyMd3kp4MGQoLFeMWM6Lion2T3q3h6DScBViFrXXuZoxkHq1TB1mGufMoGzfXd7jJ7ocgpJGxdEiGirjGயமைக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,திவ்யா துரைசாமி,இளவரசு,சிபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் நடந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி கடைசியில் தொடங்கியது சூர்யா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சூர்யா அதன் பின் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார்.தற்போது சூர்யா 40 படத்தில் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சூர்யா.மீண்டும் படப்பிடிப்பில் சூர்யா இணைந்துள்ளதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.