நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த தீபாவளி வெளியீடாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது 

இந்நிலையில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படமும் OTT யில் வெளியாகவுள்ளது. கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார்.

மேலும் நடிகர் மணிகண்டன், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகைகள் ராஜிஷா விஜயன், லிஜோமொள் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் S.R.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக வெளியான ஜெய் பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படம் வருகிற நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் என்பதால் இப்படம் தீபாவளி பரிசாக ரசிகர்களை மகிழ்விக்க இருக்கலாம் என தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.