கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை மத்திய அரசும் மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில்,

“நம்ம தலைவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்” 

“கொரோனா வைரஸுக்கு எதிராக  நாம் அனைவரும் ஒன்றிணைந்து  கொரோனாவை ஒழித்து இந்த போரில்  வெற்றி காண்போம்”

என பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தான் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பினார். இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. 

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில்   ஐதராபாத்தில் இருந்து நேற்று சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் ஜாக்கி ஷெராப் பிரகாஷ்ராஜ் சதீஷ் சூரி என ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.