தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. 

trip sunaina

சுனைனா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ட்ரிப். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது ட்ரிப் படத்தின் டீஸர் வெளியானது. யோகிபாபு மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

yogibabu sunaina

உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு.