பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் 96. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது இப்படம். ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். 

jaanu sharwanand

ரீமேக்கான இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார். இன்று வெளியான இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. வர்ஷா பொல்லமா முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

samantha sharwanand

தற்போது படத்திலிருந்து ப்ரோமோ வீடியோ வெளியானது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.