சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது.யாஷிகா ஆனந்த் கொரோனாவுக்கு பிறகு வந்த சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

கர்பமாக இருப்பதால் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஷாமிலி சுகுமார் விலகினார் இவருக்கு பதிலாக அக்ஷயா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ரசிகர்களின் ஆதரவோடு 800 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

தற்போது பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.தமிழில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சமீபத்தில் ஹிந்தியில் ரீமேக் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து இந்த தொடர் ரீமேக் ஆவது குறிப்பிடத்தக்கது.