'தியேட்டர் எல்லாம் என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க!'- வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து பேசிய சூரியின் அதிரடி வீடியோ!

வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து பேசிய சூரி,Soori opens about vetrimaaran soori in vaadivaasal movie | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அந்த வகையில் வெற்றி மாறனின் திரைப்படங்களில் இதுவரை வந்ததிலேயே மிகச் சிறந்த திரைப்படம் என சொல்லும் அளவிற்கு மிக அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் விடுதலை திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கி இருக்கும் விடுதலை திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்து உள்ளன ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தனை நாட்களாக நகைச்சுவை நடிகராக மக்களின் மனம் கவர்ந்த நடிகர் சூரி முற்றிலும் மாறுபட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் காவலராக குமரேசன் எனும்  வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும் பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகள் குறைவென்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கூட்டி இருக்கும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கின்றன.  அந்த வகையில் தளபதி விஜய் உடன் ஒரு படம் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ஒரு படம் முன்னதாக வெளிவந்த வடசென்னை படத்தின் 2ம் பாகம் என நீளும் அந்த பட்டியலில் அடுத்து தயாராக உள்ள திரைப்படம் வாடிவாசல். முதல் முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிக்கிறார். வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. எனவே வெகு விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சூரி வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் கலந்து கொண்டது குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “வாடிவாசலில் அந்த ஒரு வீடியோ ட்ரைலரும் கிடையாது டீசரும் கிடையாது ஒரு முன்னோட்டம் என்று கூட எடுத்துக் கொள்ள முடியாது டெஸ்ட் ஷூட் என்பது போல் மட்டும் தான் எடுத்திருந்தார்கள். அதுவே அவ்வளவு நம்பகத் தன்மையோடு இருந்தது. நீங்கள் அதை பார்க்கும் போது எப்படி இருந்தது?” என கேட்டபோது, "நான் பார்க்கும்போதே தெரிஞ்சது. இது எவ்வளவு பெரிய படமாக போகிறது என்று, அந்தப் பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் எல்லாம் இந்த படத்தை கொண்டாட போகிறார்கள். அப்போதே இது திருவிழா தான் என நினைத்துவிட்டேன். நிறைய மாடுபிடி வீரர்கள் அங்கே வந்திருந்தார்கள். எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இந்த ஜல்லிக்கட்டு வாழ்க்கைக்குள் நானும் இருந்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறேன். எங்கள் வீட்டிலும் மாடு இருக்கிறது. எனக்கு தெரியும், இது எப்படி இருக்க போகிறது என்று... மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அண்ணனும் சூர்யா அண்ணனும் இணையும் போது எப்படி வரும் என்று மட்டும் யோசித்துப் பாருங்கள். இந்த வாடிவாசல் படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் தியேட்டர் எல்லாம் என்ன ஆகிறது என்று மட்டும் பாருங்கள்” என நடிகர் சூரி பேசியுள்ளார். சூரியின் அந்த முழு பேட்டி இதோ…
 

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பவர்ஃபுல் பரிசு… மாஸ் அப்டேட் உடன் வந்த தங்கலான் பட அதிரடியான புது போஸ்டர் இதோ!
சினிமா

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பவர்ஃபுல் பரிசு… மாஸ் அப்டேட் உடன் வந்த தங்கலான் பட அதிரடியான புது போஸ்டர் இதோ!

சினிமா

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம்!"- அசத்தலான முதல் GLIMPSE இதோ

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்கு முன் மணிரத்னத்தின் ஸ்பெஷல் திட்டம்... ருசிகர தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்கு முன் மணிரத்னத்தின் ஸ்பெஷல் திட்டம்... ருசிகர தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ!