காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் தீம் பாடல் மற்றும் ரொமான்டிக் பாடல் அதோடு ஒரு குத்து பாடல் என்று மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் சற்று தாமதமாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து இந்த பாடல் அடுத்த நாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் யூடியூப்பில் சாதனை படைத்தது.

இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இந்த அறிவிப்பு பல ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,இருந்தாலும் சூர்யாவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் சில ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காட்டுப்பயலே பாடலின் லிரிக் வீடியோ 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.இதனை சூர்யா ரசிகர்கள் கோலாகலமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.