தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் SK 16 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan Hero Movie

Sivakarthikeyan Hero Shooting

ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Sivakarthikeyan Hero Shooting

Sivakarthikeyan Hero Pooja Pics

பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Sivaakrthikeyan Hero Pooja

Sivakarthikeyan Hero Pooja Pics

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த படத்தில் பிரபல பாடலாசிரியர் பா.விஜய் ஒரு முக்கிய பாடலை எழுதியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை பா.விஜய் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.