சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor FirstLook Poster Released

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor FirstLook Poster Released

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.வித்தியாசமான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..