தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞன் தான் சிலம்பரசன்.

அந்த வகையில்  இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மாயன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மச்சி எனும் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். நடிகர் வினோத் மோகன் கதாநாயகனாக நடிக்கும் மாயன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிந்து மாதவி நடித்துள்ளார். 

மாயன் படத்தை ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் GVKM எலிஃபன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் M.S.ஜோன்ஸ் ருபெர்ட் இசையில் “மச்சி” பாடலை நடிகர் சிலம்பரசன் உடன் விஜய் டிவியின் சிவாங்கியும் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிவாங்கி பேசும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.