வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறார். இந்த லாக்டவுனில் கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். 

Shanthanu Promotes His Maid As Camera Woman

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவரது வீட்டு பணிப்பெண்ணாக இருக்கும் யுவஶ்ரீயுடன், ஷாந்தனுவும் அவர் மனைவியும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, எங்கள் குறும்படத்தின் கேமரா வுமன் இவர்தான். யுவஶ்ரீ எங்கள் வீட்டில் தங்கியிருந்து பணிப்பெண்ணாக வேலை பார்ப்பவர். நமக்கு தெரியாத, பல திறமைகள் இங்கு இருக்கிறது. அதை நாம் சரியாக அடையாளம் காணவேண்டும் என பதிவு செய்துள்ளார். 

Shanthanu Promotes His Maid As Camera Woman

ஷாந்தனுவின் இந்த பதிவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். நடிகர் ஷாந்தனு அடுத்ததாக லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.