மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் இயக்குனர் ரத்னகுமார். இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். 

Rathnakumars Daughter Dancing For Vaathi Coming

XB நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலருக்கு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Rathnakumars Daughter Dancing For Vaathi Coming

லாக்டவுனில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி டிக் டாக் வீடியோ வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ரத்ன குமாரின் மகள் குரலினியாள் வாத்தி கமிங் பாடலுக்கு கியூட்டாக நடனமாடியுள்ளார். ரத்ன குமார் ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது.