வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கினர் படக்குழுவினர். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார். 

இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார். 

தற்போது Dadson பிக்சர்ஸ் தயாரிப்பில் எங்க போற டி எனும் பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. இதில் ஷாந்தனுவின் மனைவி கிகி விஜய் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிருந்தா மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன கோரியோகிராஃபி செய்துள்ளார். இசையமைப்பாளர் தரன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். 

ஷாந்தனு கைவசம் முருங்கைகாய் சிப்ஸ் படம் உள்ளது. இந்த படத்தில் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி அசத்தி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.