கார்த்திக் ராஜ் - ரம்யா பாண்டியன் நடிக்கும் முகிலன் !
By Aravind Selvam | Galatta | October 15, 2020 16:14 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.TRP-யை அள்ளிக்குவித்து வரும் இந்த தொடரின் நாயகனாக கார்த்திக் நடித்து வருகிறார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.தற்போது இவர் ஜீ-5 நிறுவனத்திற்காக ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.முகிலன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸில் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இது குறித்த பத்திரிகை செய்தியை தற்போது ஜீ5 வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது
ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ் (செம்பருத்தி புகழ்) மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘முகிலன்’ வெப் சீரிஸ், ZEE5 தனது அடுத்த வெளியீடு என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது. பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது.
ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்.பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.முகிலன்”அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
Bigg Boss 4 Tamil - Unseen Deleted Scene | Rio Raj | Nisha | Velmurugan
15/10/2020 04:21 PM
KGF 2 New Mass Promo Video - Rocky Bhai vs Adheera begins!
15/10/2020 03:21 PM