மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் சீறு. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

rathnasiva seeru

ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். நவ்தீப் வில்லனாக வருகிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கே சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக சீறு உருவாகியுள்ளது. 

jiiva jiiva

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் தற்போது பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளதாம். தற்போது படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ கலாட்டா வாயிலாக வெளியானது.