தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார் சதீஷ். சாம் சி.எஸ் இசையமைக்கும் ராஜவம்சம் படத்தில் சதீஷ் ஓர் பாடல் பாடியுள்ளார். 

sathish

அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ராஜவம்சம். இதில் நாயகியாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமாருடன் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

sathish

ராஜவம்சம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த டீஸரை வெளியிட்டுள்ளனர். கூட்டு குடும்பத்தின் மகிமையை எடுத்துரைக்கும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது.