சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சஞ்சீவ். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் எனும் தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் உள்ள ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது கண்மணி சீரியலில் நடித்து வருகிறார். 

Sanjeev

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், விஜய்யுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் படித்த அதே கல்லூரியில் தான் சஞ்சீவும் படித்தார். இந்நிலையில் கல்லூரி காலத்தில் எடுத்த குரூப் போட்டோவை பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். அப்புகைப்படத்தில் அரும்பு மீசையுடன், கோட் ஷூட்டில் ஸ்டைலாக இருக்கிறார் விஜய். 

Vijay And Friends Sanjeev

இவர்களுடன் நடிகர் ஸ்ரீநாத்தும் உள்ளார். இவர் விஜய்யின் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது. XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்திலும் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் நடித்துள்ளனர்.