தமிழ் திரையுலகில் சிறந்த நடனக்கலைஞர்களில் ஒருவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. சென்னையில் நேற்று நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய் கெட்டப் போட்ட தனது நடன பள்ளி மாணவர்களுடன் அசத்தலான டான்ஸ் ஒன்றை ஆடினார். குறிப்பாக குட்டி ஸ்டோரி விஜய்சேதுபதி வெர்ஷனை செய்து அசத்தினார். 

Sandy MasterAudioLaunch

கில்லி, போக்கிரி, ஜில்லா, தலைவா, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வரும் தளபதியின் கெட்டப்புகளில் வேடமிட்டு வந்த சிறுவர்கள் அந்தந்த பாடல்களுக்கு நடனமாடி அரங்கத்தை அதிரவைத்தனர். 

MasterAudioLaunch MasterAudioLaunch

இதனைத் தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது குழுவுடன் சாண்டி மாஸ்டர் கலக்கல் டான்ஸ் ஆடினார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு, குட்டி  தளபதிகளுடன் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடியது மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தை தெறிக்க விடுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Had fun with kutti thalapathys in master audio launch 😍 thankyou so much for entire team

A post shared by SANDY (@iamsandy_off) on