தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாண்டி மாஸ்டரை தெரியாதவர்களே இருக்கவே முடியாது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கியவர், திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். காலா, கபாலி, கோமாளி, சங்கத்தமிழன் போன்ற படங்களுக்கு டான்ஸ் கோரியோ செய்துள்ளார். 

Sandy Imitates MGR Sword Fight In Instagram Video

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Sandy Imitates MGR Sword Fight In Instagram Video

இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எம்.ஜி.ஆர் படங்களில் வருவதுபோல், கயிற்றில் தொங்கி தன் உறவினரோடு டம்மி வாளால் சண்டை போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Puratchi thalaivar varar 🔥 wait pannunga

A post shared by SANDY (@iamsandy_off) on