கடந்த 2008-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்தார் சமீரா. இந்த அழகான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி, சமீபத்தில் காஸ்டிங் கவுச் பற்றி மனம் திறந்தார். அது பற்றி பேசியவர் ஒரு பாலிவுட் ஹீரோ தன்னிடம் காஸ்டிங் கவுச் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கூறியதாக தெரிவித்தார். அதற்கு பிறகு நான் அந்த ஹீரோவுடன் அவர் பணியாற்றவே இல்லை என்பதையும் கூறினார். சமீராவின் துணிச்சலான குணம் பலரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் உடல் எடை குறைத்தது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ரெட்டி பதிவு செய்துள்ளார். கர்பகாலத்தில் உடை எடை கூடியது பற்றியும், அதன் பிறகு உடல் எடையை குறைத்தது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து பதிவு செய்துள்ளார். 

மேலும் 2012, 2015, 2019 ஆண்டுகளில் எப்படி இருந்தார் என்பதை புகைப்படம் வாயிலாக வெளியிட்டுள்ளார் சமீரா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameera Reddy (@reddysameera)