கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

SakshiAgarwal

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, பாடல் பாடுவது, சமையல் செய்வது என நேரத்தை செலவு செய்து வருகின்றனர். 

SakshiAgarwal

இந்நிலையில் நடிகை சாக்ஷி டெடி பியர் பொம்மை கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாக்ஷி கைவசம் டெடி, அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது.