மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். அதே வருடத்தில் ஒஸ்தி படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார். அங்குள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு தனது காதலரான ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்தார். 

Riccha

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை ரிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. 

Richa

இந்நிலையில் ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீட்டிற்குள்ளேயே வாரக்கணக்கில் அடைந்து இருப்பதால் மகிழ்ச்சி இல்லை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் இருக்குமிடம் சமூக இடைவெளியை பின்பற்றக் கூடிய அளவில் இருக்கிறது. என் கணவர் சிறிய சுற்றுலாவை ஏற்பாடு செய்தார். வீட்டு பின்னால் இருக்கும் கடற்கரையில் ஒரு நீண்ட பயணமும், மீன் மீன் பிடிக்கும் படலமும் நடைபெற்றது. பின்பு வீட்டுக்கு திரும்பினோம். இப்படி ஒரு சொர்கத்தை வீட்டுப் பின்புறத்தில் வைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தில் சிறந்த மனிதர் எனது கணவராக வாய்த்திருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Being cooped up in the house for weeks on end is no fun. Luckily, where we live, social distancing can still be practiced while enjoying our favorite activities outdoors.⁣ ⁣ ⁣ Joe planned a spontaneous little outdoor getaway for us today, including a picnic- complete with rosé and prosciutto (bc we're fancy like that), fishing on his favorite Oregon river and an invigorating, long walk on the ocean beach before heading back home. 🎣🏞️🌊🍷⁣ ⁣ Truly lucky to be able to have paradise in our backyard, and to be married to the most perfect man 💗⁣ ⁣ ⁣ #Oregon #Fishing #Outdoors #SocialDistancing #OregonCoast #PacificOcean #Roseallday

A post shared by Richa Langella (@richalangella) on