விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இப்படத்திற்கு பிறகு அயலான் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

ravikumar

இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் மிஷ்கினுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் மிஷ்கின் சாரை 99kmகாபி கடையில் சந்தித்து பேசினேன். முதல் சந்திப்பு. ரொம்பவும் கறார் தன்மையில் இருப்பவர் என்று நினைத்திருந்தேன். அப்படியில்லை அவ்வளவு இனிமையான மனிதர் அக்கறையான விசாரிப்பு. மனதுக்கு நெகிழ்ச்சியான சந்திப்பு. நறுமுகைக்கு அவர் கொடுத்த பிறந்த நாள் பரிசு என அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்திருக்கிறார். 

ravikumar ravikumar mysskin

ரவிக்குமார் இயக்கி வரும் அயலான் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று ரோலில் நடிக்கிறார் என்ற செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. ஏலியன் கொண்ட போஸ்டர் இணையத்தை தெறிக்க விட்டது.