தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர்  நடிப்பில் தயாரான பென்குவின்,மிஸ் இந்தியா திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே,குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரங் தே, குட் லக் சகி உள்ளிட்ட படங்களின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனாவை அடுத்து தற்போது ரங் தே படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.விரைவில் அண்ணாத்த,sarkaaru vaari paata ஷூட்டிங்கில் கீர்த்தி கலந்துகொள்ளுவார் என்று தெரிகிறது.

இவர் நடித்து வந்த ரங் தே படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழுவினர் சமீபத்தில் நிறைவு செய்தனர்.இந்த படத்தில் இருந்து ஜாலியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.