இணையத்தை அசத்தும் காடன் திரைப்பட டீஸர்
By Sakthi Priyan | Galatta | February 13, 2020 09:13 AM IST
![இணையத்தை அசத்தும் காடன் திரைப்பட டீஸர் - Tamil Movie Cinema News இணையத்தை அசத்தும் காடன் திரைப்பட டீஸர் - Tamil Movie Cinema News](https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/news_images/indexdp-7688.jpg)
தொடரி படத்தை தொடர்ந்து பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகிறது. தற்போது படத்தின் டீஸர் வெளியானது.
PROMO: Shubh Mangal Zyada Saavdhan | Ayushmann Khurrana
12/02/2020 09:09 PM
Dhanush to begin shooting for Atrangi Re with Sara Ali Khan in March!
12/02/2020 09:00 PM