தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்தார் ஷங்கர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரன்வீர் கபூர் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க தயாராகி வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இதனை தவிர ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஷங்கர்.இவரது மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது.

இந்தியன் 2 படத்தினை முடிக்காமல் வேறு படத்தினை தொடங்கக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது , இந்த வழக்கில் ஷங்கர் வேறு படங்களை இயக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இதனை தொடர்ந்து அடுத்த பட வேலைகளை ஷங்கர் தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்ற பிரத்யேக தகவல் நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.