ரஜினிகாந்த் பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் ஆவரா என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதில் அளித்துள்ளார்.

பாஜகவின் தமிழ் மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் யார் என்று கடந்த சில நாட்களாகத் தமிழக ஊடகங்களிலும், இணையத்திலும் பெரிதும் விவாதமே நடந்து வந்தது.

H Raja

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைமையை ஏற்க 15 பேரை ஊடகங்கள் விவாதத்தின் மூலம் அடையாளம் காட்டியுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அகில இந்தியத் தலைமை சரியான நேரத்தில் முடிவெடுத்து, தமிழ்நாடு பாஜகவிற்குச் சரியான தலைவரை நியமிக்கும் என்றும் கூறினார்.

Rajinikanth

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் பாஜக தலைவர் ஆவாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்துப் பேசிய ஹெச். ராஜா, ரஜினிகாந்த் புகழ் பெற்ற ஆளுமை மிக்க நபர். அவர் விருப்பம் தெரிவிக்காத விஷயத்தை நாம் விவாதிக்கக் கூடாது என்றும், அதுபற்றி பேசுவது அநாகரிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.