திகில் பட விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த திரைப்படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த திரைப்படம் முனி 2 ஆன காஞ்சனா. இந்த படம் 2011-ம் ஆண்டின் பிளாக்பஸ்டராக திகழ்ந்தது. காமெடி கலந்த திகில் திரைப்படமாக உருவாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. சரத்குமார் வரும் காட்சிகள் திரையரங்கை அதிர வைத்தது என்றே கூறலாம். 

akshaykumar akshaykumar

லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

raghavalawrence

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து அக்ஷயுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அதில் படத்துக்காக ஓர் பாடல் காட்சியின் ஷூட்டிங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்ஷய் குமார் கடுமையாக உழைப்பவர் என்றும் அவர் போன்ற மனிதரோடு பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக பதிவு செய்துள்ளார்.